மாதா அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்
2016 நவம்பர் 20 முதல் 29ம் தேதிவரை, ஸ்ரீ மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் கலிஃபோர்னியா விரிகுடாப்பகுதியில் உள்ள சான் ஹோசேக்கும், மிச்சிகனில் உள்ள டெட்ராயிட்டுக்கும் வருகை தந்திருந்தார். அம்மா தம்மைக் காணவந்த ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீக சொற்பொழிவு, தியானம், பஜனை மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன.

"நம்முடைய வாழ்வுக்கும் அவசியமானது பொறுமை. ஏனெனில் அதுதான் வாழ்வின் அஸ்திவாரம். ஒரு பூச்செடியிலுள்ள மொட்டை நமது விரல்களால் மலரச் செய்தால், அந்தப் பூவின் மணத்தையும், அழகையும் முழுமையாக அறியமுடியாது. இயல்பாக மலர அனுமதித்தால் மட்டுமே அதைச் சரியாக அறியமுடியும். அதுபோல், வாழ்வின் அழகை அனுபவிக்க வேண்டுமெனில் பொறுமை தேவை. வாழ்வைச் சந்தோஷம் நிறைந்ததாகச் செய்ய முயல்பவர்களுக்குத் தேவையான முதல் குணம் பொறுமை" என்கிறார் அம்மா.

மனித மேம்பாட்டுக்காக அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.embracingtheworld.org
மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்,
சான் ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com