அட்லாண்டா தமிழ் சபை: கிறிஸ்து பிறப்பு
அட்லாண்டா தமிழ் சபையின்மூலம் கிறிஸ்து பிறந்த நற்செய்தியை அறிவிக்கும் வண்ணம் கிறிஸ்துமஸ் பாடல்களை வீடுதோறும் அவர்கள் அழைப்பிற்கிணங்கப் பாடி சந்தோசப்படும் தருணம் இது. ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை நேரத்தில் வீடு வீடாகச் சபை போதகர் பால்மர் பரமதாஸ் அவர்களும் சபையாரும் போய் கிறிஸ்துமஸ் பாடல்களைப் (Christmas Carols) பாடி கிறிஸ்து பிறந்த நற்செய்திகளையும் கூறுவார்கள்.

அட்லாண்டா தமிழ் சபைப் பாடல் குழுவினர் சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடும் நிகழ்ச்சி டிசம்பர் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00மணிக்கு நடைபெறும்.

சபையின் ஞாயிறு பள்ளி மாணவ, மாணவியரின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கோடு நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் (Children & Youth Christmas Service) டிசம்பர் 11ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு நடைபெறும். இதில் கிறிஸ்துமஸ் தாத்தா சிறு பிள்ளைகளுக்கு வெகுமதிகளை அளித்து மகிழ்விப்பார். அன்று Rev. J. ஜெயச்சந்திரன் (Grace Assemblies of God) தேவச்செய்தி வழங்குவார்கள்.

ஆலயத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் பக்திப் பாடல்களைப் பாடும் குடும்பப் பாடல் நிகழ்ச்சி (Family Sing Song Service) டிசம்பர் 18ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு தமிழ் சபை தேவாலயத்தில் நடைபெறும்.

கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளின் உச்சக்கட்டமாக டிசம்பர் 25ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெறும். அதில் Rev. பால்மர் பரமதாஸ் அவர்கள் விசேச செய்தி அளிப்பார்கள். பாடல்குழுவினர் சிறப்புப் பாடல்களைப் பாடுவார்கள். மதியம் பல்சுவை விருந்து வழங்கப்படும்.

2016ம் வருடத்தை ஆலயத்தில் தொடங்கிய நாம், இவ்வாண்டை ஆலயத்தில் முடித்து, புதுவருடத்தை ஆலயத்தில் ஆரம்பிக்கும் வண்ணம் டிசம்பர் மாதம் 31ம் தேதி சனி இரவு 10:30 மணிக்கு விசேசித்த காத்திருப்பு ஆராதனை (Watchnight Service) நடைபெறும். இந்த ஆராதனைக்கு குடும்பமாக வாருங்கள்; புதிய வருடத்தை ஆலயத்தில் தொடங்கி ஆசீர்வாதம் பெறுங்கள்!

மேலும் விபரங்களை அறிய: www.atlantatamilchurch.org

© TamilOnline.com