கடைசி பெஞ்ச் கார்த்தி


நீண்ட இடைவெளிக்குப் பின் பரத் நாயகனாக நடிக்கும் படம் கடைசி பெஞ்ச் கார்த்தி. அங்கனாராய், ருஹானி ஷர்மா நாயகிகளாக அறிமுகமாகின்றனர். முக்கிய வேடங்களில் ரவிமரியா, கு. ஞானசம்பந்தன் நடிக்கின்றனர். பாடல்களை கலைக்குமார், அண்ணாமலை, ஏக்நாத் எழுத, இசையமைக்கிறார் அன்பு ராஜேஷ். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரவி பார்கவன். "காதலின் அர்த்தம் என்ன, காதல் என்பது எதுவரை, இன்றைய இளைய தலைமுறைக்கு காதல் மீது நம்பிக்கை இருக்கிறதா - என்ற கேள்விகளுக்கான விடைதான் இந்தப் படம்" என்கிறார் ரவி.

அரவிந்த்

© TamilOnline.com