ஹடுதியா பாக்
தேவையான பொருட்கள்
உளுத்தமாவு - 1 கிண்ணம்
கோதுமை மாவு - 1 கிண்ணம்
பாதாம் + முந்திரி (சீவியது) - 1/2 கிண்ணம்
நெய் - 1/2 கிண்ணம்
சர்க்கரை - 1 1/2 கிண்ணம்
கோவா - 1/2 கிண்ணம்
ஏலப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை
வாணலியில் நெய்விட்டுக் காய்ந்ததும் இரண்டு மாவையும் போட்டு நன்றாக வறுக்கவும், சர்க்கரையைப் பாகுவைத்து பதமானவுடன் மாவைக் கொட்டி கோவாவையும் போட்டுக் கிளறியபடி, பாதாம், முந்திரி சீவியதையும் போட்டு, நெய் விட்டுக் கிளறவும். சுருண்டு வரும்போது துளி ஏலக்காய்ப் பொடி போட்டு தட்டில் கொட்டி வில்லைகளாகப் போடவும். இது சிறப்பான குஜராத்தி தின்பண்டம். வெகு சுவையாய் இருக்கும். குளிர்காலத்திற்கு செய்து சாப்பிடுவார்கள்.

தங்கம் ராமசுவாமி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி

© TamilOnline.com