அக்டோபர் 1, 2016 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் இசைத் திருவிழா ஒன்றை நடத்தியது. ஹார்வார்டு தமிழ் இருக்கை ஏற்படுத்த நிதி திரட்டுமுகமாக இது ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. ரோஷினி, ஹரிஹரசுதன், ஜெஸிகா, அர்ஜுன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இதில் பங்கேற்றுப் பாடினார்கள். வி-ஷார்ப் இசைக்குழுவினர் பின்னணி இசை வழங்கினர். நிகழ்ச்சியை வரதீஷ், பிரேமானந்த், நம்பிராஜன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ஜெயஸ்ரீ, ராஜேஷ் ஆகியோர் சிறப்பாக உதவினர். பாடல்களை ரகுராம் மற்றும் ரவிசங்கர் தேர்வு செய்திருந்தனர். சீனி குருசாமி ஒலியமைத்திருந்தார்.
ஸ்வேதா, வர்ஷா மற்றும் நிகிதாவின் நடனம் வியக்க வைத்தது.
இந்த இசைவிழாவில் $35000 நன்கொடை திரட்டப்பட்டது. இதற்கான காசோலை மருத்துவர்கள் ஜானகிராமன் மற்றும் சம்பந்தம் ஆகியோரிடம் அளிக்கப்பட்டது. சங்கத்தின் மலரான 'பலகை'யின் இரண்டாவது இதழைத் திரு. மாணிக்கம் வெளியிட முதல் பிரதியை மருத்துவர் ஜானகிராமன் பெற்றுக்கொண்டார்.
மணி குணசேகரன், நேப்பர்வில், சிகாகோ |