பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் 91வது பிறந்தநாள் விழா
நவம்பர் 20, 2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் 91வது பிறந்தநாள் விழாவை ஸ்ரீ சத்திய சாயி பன்னாட்டு நிறுவனம் (Region 7, USA) சன்னிவேல் ஹிந்துக் கோவிலில் (450 Persian Drive, Sunnyvale, CA 94089) காலை 9:30 மணிமுதல் மாலை 5 மணிவரை “Living His Message: Love & Service” என்ற மையக்கருத்தில் கொண்டாடுகிறது. இதில் டாக்டர் வள்ளுவன் ஜீவானந்தம் (An accomplished cardiac surgeon and Chief of Cardiac and Thoracic Surgery, University of Chicago Medicine), பாபா தமது ஆன்மீக, தொழில்முறை வாழ்க்கையை எவ்வாறு உயர்மாற்றம் அடையச்செய்தார் என்பது குறித்துப் பேசுவார். இளையோர் வழங்கும் மனித விழுமியங்கள் குறித்த நிகழ்ச்சிகள், பலமதத்தவர் பங்கேற்கும் கலைவிழா, குழந்தைகளுக்கான நிகழ்வுகள் மற்றும் பஜனை ஆகியவையும் இடம்பெறும். பங்கேற்கக் கட்டணமில்லை.

அதிக விவரங்களுக்குத் தொடர்புகொள்க: ssb.birthday@gmail.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com