மோகன்லாடு அல்லது பூரிலாடு
தேவையான பொருட்கள்:
ரவை - 4 கப்
சர்க்கரை - 4 கப்
நெய் - 1 கப்
முந்திரி பருப்பு - 15
எண்ணெய் - பொரிக்க
ஏலக்காய் - சிறிதளவு

செய்முறை:
ரவையை தண்ணீர் விட்டுக் கெட்டியாய் பிசைந்து கொள்ள வேண்டும்.
1 ஸ்பூன் நெய் விட்டுக் கலந்து ஊற வைக்கவும்.
நன்றாக ஊறியதும் கிரைண்டரில் போட்டுச் சுற்றி நல்ல மாவு பதத்தில் எடுத்து சிறுசிறு அப்பளங்களாக இட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பின்பு அதை நன்றாக நொறுக்கி மிக்சியில் மாவு போல அரைக்கவும்.
சர்க்கரையையும் நன்றாக அரைத்து அத்துடன் கலந்து முந்திரி வறுத்துப் போடவும்.
ஏலக்காய் பொடி செய்து போட்டு நெய்யை காய்ச்சி ஊற்றி உருண்டை பிடிக்கவும்.
கோதுமை மாவிலும் இதே போல் பூரி செய்து உருண்டை பிடிக்கலாம்.
பொரிக்கும் எண்ணெயில் நெய்விட்டால் உருண்டை மிகவும் மணமாக இருக்கும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com