கணிதப் புதிர்கள்
1) 2, 10, 4; 3, 17, 5; 3, -, 4
மேற்கண்ட வரிசையில் விடுபட்ட இடத்தில் வர வேண்டிய எண் எது, ஏன்?

2) ஓர் ஊரில் வசிப்பவர்களின் மொத்த எண்ணிக்கை = 25600. அதில் பெண்கள் 6400 என்றால், ஆண்களின் சதவிகிதம் என்ன?

3) ஒரு கடிகாரத்தில் இருக்கும் சின்னமுள்ளும் பெரிய முள்ளும் ஒரு நாளைக்கு எத்தனை முறை கடந்து செல்லும் என்று கூறமுடியுமா?

4) ராமு தனது தோட்டத்தில் எட்டு அடிக்கு ஒரு மரம் வீதம் நட்டான். 48 அடியில் எத்தனை மரங்களை நட்டிருப்பான்?

5) இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 2346. ஒர் எண் மற்றதைப் போல இரு மடங்கு என்றால் அந்த எண்கள் யாவை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com