வேர்க்கடலை சாதம் (சிங்க்தானா பாத்)
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - 1 கிண்ணம்
எள் - 1/4 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3 அல்லது 4
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தாளிக்க

செய்முறை
வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுத்து, தோல் நீக்கிப் புடைத்தெடுத்து, மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். எள்ளை வாணலியில் வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். தேங்காய்த் துருவலை வறுத்துக்கொள்ளவும். உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம் சிறிது எண்ணெய்விட்டு வறுத்துக்கொண்டு பொடியாக அரைக்கவும். இதில் முன்பு பொடித்தவற்றுடன், வறுத்த தேங்காய், உப்புச் சேர்த்துக் கலக்கவும். பொலபொலவென வடித்த சாதத்தில் இந்தப் பொடியைப் போட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கலந்து சாப்பிடலாம். தயிர்ப்பச்சடி தொட்டுக்கொள்ள சுவையோ சுவை.

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ்வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com