தக்காளி ஆம்லெட்
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2 (பெரியவை)
கடலை மாவு - 1 கிண்ணம்
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
சீஸ் - 1/2 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
காரப்பொடி- 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - சிறிதளவு

செய்முறை
தக்காளியின் மேல்தோலை உரித்தபின் மிக்சியில் குழைய அரைத்துக் கொள்ளவும். கடலைமாவு, அரிசிமாவு, சீஸ் இவற்றுடன் தக்காளி விழுதைச் சேர்த்து காரம், உப்பு, பெருங்காயம் போட்டு நன்றாகக் கரைக்கவும். மாவில் கொஞ்சம் நீர்விட்டுக் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மேசைக்கரண்டியால் பரவலாக மாவை ஊற்றிச் சுற்றிலும் சிறிது எண்ணெய்விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்துச் சாப்பிடவும். கெச்சப் தொட்டுக்கொள்ளலாம். சுவையாக இருக்கும்.

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ்வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com