தென் கலி·போர்னியாவில் இன்னிசைத் தமிழ் மாலை
சென்னையின் பிரபல 'லக்ஷ்மண் ஸ்ருதி' இசைக்குழுவோடு முன்னணிப் பாடகர் களான உன்னி கிருஷ்ணன், 'கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா' புகழ் ஸ்ரீலேகா, 'கனாக் காணும் காலங்கள்' புகழ் மதுமிதா, 'மன்மத ராசா' புகழ் மாலதி, பலகுரல் மன்னர் சரவணன், உள்ளிட்ட குழு 'தமிழ் இசை மழை' பொழிந்தது.

லக்ஷ்மன் இசை நடத்த, சந்தானம் (புல்லாங்குழல்), பாண்டுரங்கன் (தபேலா), ராஜகோபால் (டிரம்ஸ்), கோபால கிருஷ்ணன் (கீ போர்டு), வசந்தகுமார் (கடம்), இரத்தினவேல் (கிதார்) ஆகியோர் பல்லியம் (orchestra) வாசித்தனர்.

சரவணன் ரசிகர் கூட்டத்திற்குள் ஒன்றாகி 'மச்சான் பேரு மதுரை' என்ற பாடலைப் பாட சிறுவர் முதியவர் எல்லோரும் ஆடிப் பாடலை ரசித்தனர். லஷ்மணின் சகோதரர் ராமன் பாடல்களுக்குத் தொடர்புள்ள கலைஞர்களை மனக்கண்ணில் தோற்றுவித்தார்.

'தமிழுக்கும் அமுது என்று பெயர்' என்ற மாலதியின் பாடலுடன் தொடங்கி அவரது குரலிலேயே 'மன்மத ராசா' பாடலுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

யு. எஸ். ராஜ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிபர் மகேந்திரராஜாவின் தாயார் திருமதி நல்லையா ஞானரத்தினம் கலைஞர்களுக்கு 'நினைவுக் கேடயம்' வழங்கி கெளரவித்தார்.

தமிழ்ப்படம் உரிமையாளர்கள் பாஸ்கர், ஒடை பெரி, யு. எஸ். ராஜ் பிக்சர்ஸ் அதிபர்கள் மகேந்திரராஜா, நொயலின் மகேந்திரராஜா, நிகழ்ச்சித் தொகுப்பாளர் சிவப்பிரகாசம் ஸ்ரீகுமார் ஆகியோருக்கு லக்ஷ்மன் சுருதி சார்பில் உன்னிகிருஷ்ணன் மாலையும் பொன்னாடையும் அணிவித்தார்.

பிரகாசம்

© TamilOnline.com