ஜூலை 10, 2016 அன்று மாலை சான் ஹோசே CET ஆன்டனி அரங்கத்தில் திருமதி. எம்.எஸ். சுப்புலக்ஷ்மி நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் சிறப்பாக ஆரம்பமானது. சென்னை, சங்கர நேத்ராலயா மருத்துவமனை மற்றும் யு எஸ், சங்கர நேத்ராலயா ஆப்தால்மிக் மிஷன் டிரஸ்ட் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது. ஆப்தால்மிக் அறக்கட்டளையின் கலிஃபோர்னியா பிரிவின் காப்பாளர்களான திரு. பார்த்தசாரதி சக்கரவர்த்தி, திரு. ராம் ஆகெல்லா, திருமதி. ஹேமா பார்த்தா மற்றும் பலர் இதனைத் திட்டமிட்டு நடத்தினர்.
பிரபல கலைஞரும் ராகமாலிகா இசைப்பள்ளி நிறுவனருமான திருமதி. ஆஷா ரமேஷ் அவர்களுடன் அவரது மாணவர்களும் இணைந்து வழங்கிய இசைக்கச்சேரியோடு விழா ஆரம்பமானது. திரு. ஜெய்சங்கர் பாலன் (வயலின்), திரு. விக்னேஷ் வெங்கட்ராமன் (மிருதங்கம்) ஆகியோர் பக்கம் வாசித்தனர்.
சங்கர நேத்ராலயா நிகழ்ச்சிகளில் எம்.எஸ். அம்மா கலந்துகொண்டு சிறப்பித்த நிகழ்வுகள் மற்றும் அதன் இலவச சேவைப்பிரிவின் பணிகள் குறித்த புகைப்படங்கள் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அமெரிக்காவில் வருடம் முழுவதும் தொடரவிருக்கும் திருமதி எம்.எஸ். அம்மா நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் சிறப்பான தொடக்கமாக இது அமைந்திருந்தது.
ஆங்கிலத்தில்: பார்த்தசாரதி சக்ரவர்த்தி தமிழில்: இருங்கோவேள் |