ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாண்டு நிறைவை ஒட்டி, 'சின்னஜீயர்' என்று போற்றப்படும் த்ரிதண்டி ஸ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள், உடையவரின் பெருமையை உலகறியும் வகையில், ஹைதராபாத் அருகே ஸம்ஷாபாதில் அவருக்கு 216 அடியளவில், அமர்ந்திருக்கும் நிலையில் ஒரு சிலையை ஸ்தாபிக்க இருக்கிறார். இதற்கு சமதாமூர்த்தி என்று பெயரிட்டு மரியாதை செய்ய உள்ளனர். உலகின் மிகப்பெரிய, அமர்ந்த நிலையிலிருக்கும் சிலையாக இது இருக்கும்.
இதற்காகத் தற்போது அமெரிக்காவில் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் சுவாமிகள். நவம்பர் 19 அன்று, டெக்சஸ் மாநிலம் டாலஸில், சஹஸ்ர கலார்ச்சனாவை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளார். ஸ்ரீ சுவாமிகளின் தலைமையில் சுமார் 5000 பக்தர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். இதில் பங்கேற்க உலகெங்கிலுமிருந்து சுமார் ஆயிரம் இசைக்கலைஞர்கள் வரவுள்ளனர். ஸ்ரீ ராமனுஜர் பற்றிய பாடல்களைத் தமிழ், தெலுங்கு, சமஸ்க்ருத மொழிகளில் இசைத்துச் சமர்ப்பிக்க உள்ளனர். நீங்களும் தொலைபேசி மூலமாக இந்தப் பாடல்களைக் கற்று, நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.
சின்னஜீயர் சுவாமிகள் பெண்களுக்கென்று தனி மருத்துவ முகாம், குழந்தைகளுக்கு வேதம், உபநிஷதம் போன்ற புனிதநூல்களிலிருந்து நீதிக்கதைகளைப் போதித்தல், நற்பண்புகள் வளர்க்கும் பாடங்கள், பார்வையற்றவர்களுக்குப் பள்ளிக்கூடங்கள், கைதிகளுக்குப் புனர்வாழ்வு தரும் பாடங்கள், பழங்குடி மக்களுக்குத் தனிப் பள்ளிக்கூடங்கள் என்று அளவற்ற நற்பணிகளை ஆற்றிவருகிறார். இந்த விழாவில் திரளாக அனைவரும் கலந்துகொள்ளவும்.
விவரங்களுக்கு: இணையதளம்: statueofequality.org தொலைபேசி: 214-785-1988 மின்னஞ்சல்: equaltiy@jetusa.org
ஜகந்நாதன், டாலஸ், டெக்சாஸ் |