க்ரேஸியின் 'கூகிள் கடோத்கஜன்'
அக்டோபர் 09, 2016 அன்று, லாங் பீச் (Long Beach ,CA) நகரில், Cabrillo High School அரங்கத்தில், மாலை 4:30 மணிக்கு க்ரேஸி மோகனின் 'கூகிள் கடோத்கஜன்' என்னும் புத்தம்புதிய நகைச்சுவை நாடகம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை 'உதவும் கரங்கள்' அமைப்புடன் தென்கலிஃபோர்னிய தமிழ் மன்றம் இணைந்து சமூக சேவைக்கான நிதி திரட்டும்பொருட்டு நடத்துகின்றது.

க்ரேசி க்ரியேஷனின் 37வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. பக்தர்கள் மஹா விஷ்ணுவை பக்தியுடன் அழைத்தவுடன் எப்படி ஈகிள் (கருடன்) மீது வந்தாரோ, அதேபோல் கூகிளில் டவுன்லோடு செய்ததால் கடோத்கஜன் பூவுலகிற்கு வந்தார் என்பதாகப் போகும் இதன் கதை சிறுவர்முதல் பெரியோர்வரை எல்லோரையும் மகிழ்விக்கும்.

நுழைவுச்சீட்டு வாங்க: www.socaltamilmanram.org

தொடர்புக்கு:
மின்னஞ்சல்: socaltm@gmail.com
தொலைபேசி: 562-653-6120

விஜயராகவன்,
தென்கலிஃபோர்னியா

© TamilOnline.com