அக்டோபர் 2016: வாசகர் கடிதம்
பத்மஸ்ரீ டாக்டர் பத்ரிநாத் அவர்களுடனான நேர்காணல் அருமை. இந்தியர்களுக்குப் பெருமைசேர்க்கும் ஆர்த்தி சம்பத்தின் சமையல் திறமை வியக்கத்தக்கது. மற்ற அம்சங்களும் சிறப்புத்தான்.

R. கண்ணன், கீதா கண்ணன்,
சன்னிவேல், கலிஃபோர்னியா

*****


செப்டம்பர் மாதத் தென்றலில் 'TNF இன்டர்ன்ஷிப்: தலைமுறைப் பாலம்' நல்லகுறிக்கோள் கொண்ட முயற்சி. எழுத்தாளர் இரா .நாறும்பூநாதன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துவரும் சுவாரஸ்யமான தகவல்கள் பற்றிய குறிப்பும், அவரது சிறுகதையும் அருமை.

சசிரேகா சம்பத்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

*****


"அமெரிக்காவிலிருந்து என்ன வேண்டும்?" என்று என் மகள் எப்போது கேட்டாலும், "தென்றல்" என்று சொல்லுமளவுக்கு, எங்களைத் தென்றல் கவர்ந்திருக்கிறது. பல அரிய தகவல்களையும், சாதனையாளர்களின் அனுபவங்களை அள்ளித்தரும் பேட்டிகளையும், அமெரிக்காவாழ் தமிழர்கள் படைக்கும் சுவாரஸ்யமான, தரமுள்ள சிறுகதைகளையும், கட்டுரைகளையும், மனித உறவுகளின் மகத்துவத்தை மனதில் பதியவைக்கும் டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரனின் ஆலோசனைகளையும், தமிழ்நாட்டிலுள்ள ஆலயங்கள் அனைத்தையும் தரிசனம் செய்துவைக்கும் சீதா துரைராஜ் அவர்களின் ஆன்மிகக் கட்டுரைகளையும் வெளியிட்டு, தமிழ்ப் பத்திரிகையுலகில் தனியிடத்தைத் தக்க வைத்துள்ள தென்றலை மிகவும் பாராட்டுகிறேன். தென்றல் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்!

லக்ஷ்மி ரமணன்,
நியூ ஜெர்சி

*****


ஆர்த்தி சம்பத் நேர்காணல் மிகநேர்த்தி. தமிழ்வடிவம் ரொம்பவும் அபூர்வம்! பலே பலே! ஒரே ஒரு சாக்லேட் கேக் ஆர்த்தியின் வாழ்க்கையை திசை திருப்பிவிட்டது பெரிய ஆச்சரியம். தென்றலுக்கு நெஞ்சம்நிறைந்த வாழ்த்துக்கள்!

முனைவர் சுப்பிரமணியன் தியாகராஜன்,
சாரடாகோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com