இந்திய மேம்பாட்டு நிறுவனத்துடன் (Association for India's Development) இணைந்து சன்ஹிதி வழங்கும் 'வைப்ஸ்' (அதிர்வுகள்) நாட்டிய நிகழ்ச்சி அக்டோபர் 1 மற்றும் 2, 2005 தேதிகளில் பாலோ ஆல்டோவில் உள்ள கப்பர்லி அரங்கத்தில் மாலை 4:30 மணிக்கு நடைபெறும்.
இரண்டாம் ஆண்டின் தயாரிப்பான 'வைப்ஸ்' நாட்டிய நிகழ்ச்சியில் தென்னிந்திய நாட்டுப்புற நடனம், சாஸ்திரீய நாட்டியத் துடன் பொருந்திவரும் நடனங்கள், திரைப் பட நடனங்கள் ஆகியவை இடம் பெறும்.
தென்னிந்திய நடனக் கலையின் பெருமையை உணர்த்தவும் வளைகுடாப் பகுதியில் உள்ள முன்னணி மற்றும் வளர்ந்து வரும் நடனக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத் துடன் செயல்பட்டு வருகிறது சன்ஹிதி. மேலும் விவரம் அறிய: www.sanhiti.org
இந்திய மேம்பாட்டு நிறுவனம் (AID) ஓர் அரசு சார்பற்ற, இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனம். சமீபத்தில் மும்பையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, அதற்குமுன் ஆழிப் பேரலைகளால் (Tsunami) ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட் சேதங்கள், குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் அழிவுகளில் மக்களுக்கும் உயிரினங்களுக்கும் புனர்வாழ் வளிக்கும் நிவாரணப் பணிகளில் இந் நிறுவனத்தின் தொண்டர்கள் உடனடியாக நிவாரணப் பொருட்களுடன் விரைந்து சென்று முகாம்களை அமைத்து பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி அளித்துப் பராமரித் துள்ளனர்.
இந்நிறுவனத்தின் தொண்டு தொடர்ந்து நடைபெற நிதி தேவைப்படுகின்றது. 'வைப்ஸ்' மூலம் திரட்டப்படும் நிதி AID நிறுவனத்தின் பணிகளுக்கு அளிக்கப்படும். வளைகுடாப் பகுதிக் கிளை பற்றி அறிய: www.aidsfbay.org
நிகழ்ச்சி: 'வைப்ஸ்' நாட்டிய நிகழ்ச்சி இடம்: கப்பர்லி தியேட்டர், பாலோ ஆல்டோ நாள்: அக்டோபர் 1, 2005 (சனி), அக்டோபர் 2, 2005 (ஞாயிறு) நேரம்: மாலை 4.30 மணி நுழைவுக் கட்டணம்: $20, $15 (இடைவேளையின்போது சிற்றுண்டி விற்பனைக்கு உண்டு.) இணையம் வழியே சீட்டுகள் வாங்க: www.sulekha.com/bayarea மின்னஞ்சல்: tickets@sanhiti.org தொலைபேசி: சன்ஹிதி 408-935-9558 தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஆர்த்தி ரிஷி |