'ரெட்டச்சுழி' என்ற வித்தியாசமான படத்தைத் தந்த இயக்குநர் தாமிரா இயக்கும் புதியபடம் ஆண் தேவதை. சமுத்திரகனி தான் அந்தத் தேவதை. உடன் ரம்யா பாண்டியன், கவின், கஸ்தூரி, இளவரசு, மயில்சாமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசை. எழுதி, இயக்குகிறார் தாமிரா. "இன்று உலகமயமாக்கல், நகரமயமாக்கல் சூழல்தான் பெரும்பாலான நகரவாசிகளை இயக்குகிறது. சட்டைமுதல், அலைபேசி நெட்வொர்க் வரை எதையும் அதுவே முடிவு செய்கிறது. இப்படிப்பட்ட சூழலில் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு போன்றவை எத்தகைய சிக்கல்களை எதிர்கொள்கின்றன என்பதைப் பற்றிப் பேசுகிறது படம்" என்கிறார் தாமிரா.
அரவிந்த் |