மேற்கு முகப்பேர் ஸ்ரீகனகதுர்கா


இயக்குநர் இராம. நாராயணன் மறைவுக்குப்பின் பக்திப்படங்கள் வருவதே தமிழில் அருகிப்போனது. அந்தக் குறையைத் தீர்க்க, நீண்ட நாட்களுக்குப் பின் இப்படம் வருகிறது. மகி, சரவணன் நாயகர்களாக அறிமுகமாக, திவ்யா நாகேஷ், ஜான்விகா இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் டெல்லி கணேஷ், டி.பி. கஜேந்திரன், ஸ்ரீஹரி, பிரதீப், நதியாஸ்ரீ, வைகை கவிதா, ராகவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தேவா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதித் தயாரிக்கிறார், E. ஜெயபால் சுவாமி. சந்திர கன்னையன் இயக்குகிறார். “தமிழில் தற்போது பக்திப்படங்கள் வருவதே இல்லை. பேய்ப்படங்களை மட்டுமே எடுக்கிறார்கள். ஆனால் நாங்கள் துணிந்து இப்படத்தை எடுத்திருக்கிறோம். ஜாதகதோஷம் இருக்கும் ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அந்தத் தோஷம் அவர்களை படாதபாடு படுத்துகிறது. தம்பதிகள் விரதமிருந்து அம்மனை நோக்கி வேண்டுகிறார்கள். ஸ்ரீகனகதுர்கா அம்மன் அவர்களை எப்படிக் காப்பாற்றுகிறாள் என்பது படத்தின் கதை” என்கிறார் கன்னையன்.

அரவிந்த்

© TamilOnline.com