செப்டம்பர் 17, 2005 அன்று மாலை 4:00 மணிக்கு, சான் ஹோசேயின் CET அரங்கில் ரேவதி வாசனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெறும். இதனைக் கலாநிகேதன் வழங்குகிறது.
கலாநிகேதன் கர்நாடக இசை மற்றும் தஞ்சாவூர்ப் பாணி நாட்டியத்தைச் சிறந்த தரத்தில் பயிற்றுவிக்கிறது. இதன் கலை இயக்குனர் ப்ரீதா சேஷாத்ரி இசையிலும் பரதநாட்டியத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். இவர் சான் ஹோசே மாநிலப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும், பல நாட்டியப் பயிலரங்குகளை நடத்தியவரும் ஆவார்.
அரங்கேற்றம் காணும் ரேவதி வாசன் மென்பொருள் பொறியியலர். பன்னாட்டு நடன நிகழ்ச்சி, ருத்ரா நாட்டியாஞ்சலி, உதவும் கரங்கள் நிகழ்ச்சி ஆகியவற்றில் முன்னர் பங்கு பெற்றதுண்டு.
இந்நிகழ்ச்சிக்கு குரு ப்ரீதா சேஷாத்ரி மற்றும் வத்ஸலா சாரதி (குரலிசை), பாலாஜி மகாதேவன் (மிருதங்கம்), ஷர்மிளா வெங்கட் (வயலின்) ஆகியோர் துணை அளிப்பர். அனைவரும் வருக.
தமிழில்: சரஸ்வதி தியாகராஜன் |