மந்திர யோகம்
'மனசே, ரிலாக்ஸ் ப்லீஸ்' புகழ் சுவாமி சுகபோதானந்தா அவர்கள் வடிவமைத் துள்ள மந்திர யோகம் நிகழ்ச்சியை அவரது மாணவர்கள் சான் ·ப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் செப்டம்பர் மாதம் 17, 24 (சனிக்கிழமைகள்) ஆகிய நாட்களில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சன்னிவேல் கோமளவிலாஸ் உணவகத்தை யொட்டியுள்ள அரங்கில் ஏற்பாடு செய்துள் ளனர். சுவாமிஜியிடம் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகப் பயின்று வரும் மாணவி ஷகிலா பானு இந்தப் பயிலரங்கை நடத்துவார்.

ஷகிலா பானு அவர்கள் மந்திர யோகத்தை இந்தியா மற்றும் வளைகுடாப் பகுதிகளில் பலமுறை அளித்தவர். கடந்த ஏப்ரலில் இந்தப் பயிலரங்கம் சன்னிவேலில் நடந்த போது 12 வயது சிறுமி முதல் 70 வயது இளைஞர் வரை கலந்து கொண்டனர். சாக்கர் சிறுமி தான் பள்ளி வாழ்க்கையில் பெற்ற அனுபவத்தை "Life is not fair" என்று பகிர்ந்து கொண்ட போதும், சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் மனைவியை, அன்பால் கட்டிப் போடுவது எப்படி போன்ற கேள்வி களுக்கு சுவாமிஜி வடிவமைத்த இந்தப் பயிலரங்கில் பதில் காணும்போதும் வயது வித்தியாசம் பறந்தோடிப் போனது.

சுவாமிஜி அவர்கள் இரண்டு நாட்களும் மந்திர யோகத்தில் கலந்து கொண்டால் அதன் முழுப்பயனை அடையலாம் என்று அறிவுறுத்துகிறார். நாம் அன்றாடம் உச்சரிக்கும் மந்திரங்களின் பொருளுணர்ந்து அதனை நம் வாழ்க்கை நெறியாக்கிக் கொள்ள வழி செய்வது இந்நிகழ்ச்சியின் நோக்கம். கட்டுக்கடங்காது நம் மனதில் அலைபாயும் எண்ணங்களுக்கு நாம் எங்ஙனம் காவலாக இருப்பது? நம் வாழ்க்கையை என்றும் ஒரே சீரான கண்ணோட்டத்துடன் காண்பது எவ்வாறு? மன அழுத்தம் நிரம்பிய வாழ்க்கையை மாற்றி என்றும் சந்தோஷத்தில் திளைப்பது எப்படி? இக்கேள்விகளுக்கு விடை காணுங்கள். உங்கள் வாழ்க்கையை இன்ப மயமாக்குங்கள்.

அனுமதி இலவசம்.
தேதி: Sep 17, 24
நேரம்: மாலை 6 மணி முதல்
இரவு 10 மணி வரை
இடம்: Komala Vilas Party Hall
1020 E El Camino Real, Sunnyvale,
CA 94087

மேலும் விபரங்களுக்கு:
Kamala/Ram - vskamala@yahoo.com; 408-205-7035
Rajashree -rajashrees@yahoo.com; 408-248-4506
Aparna/Siva - aparna_sraju@yahoo.com, 408-744-1147
இணையத்தளம்: www.swamisukhabodhananda.org.

சுவாமிஜியின் சொற்பொழிவுகள் ஆஸ்தா (Astha channel) அலைவரிசையில் ஒவ்வொரு திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் இரவு 8 மணிக்கும் ஜெமினி (Gemini channel) அலைவரிசையில் ஒவ்வொரு திங்கள் கிழமை காலை 6.30க்கும் PST)-க்கும் அமெரிக்காவில் ஒளிபரப்பப்படுகின்றன.

சான் ·ப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் நடக்கும் சத்சங்கங்கள் பற்றி விவரம் அறிய விரும்புவோர் toshakila@ yahoo.com அல்லது rajashrees@yahoo.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

மஹி சங்கரநாராயணன்

© TamilOnline.com