தேவையான பொருட்கள் பச்சரிசி - 1 கிண்ணம் புழுங்கலரிசி - 1 கிண்ணம் துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி வெந்தயம் - 2 மேசைக்கரண்டி
செய்முறை இவற்றை முதல் நாள் இரவு ஊறவைத்து, காலையில் அரைத்து வார்த்தால் நன்றாக இருக்கும். தோசைக்கல்லில் மாவு ஊற்றி, தட்டு வைத்து மூடி, திருப்பாமல் எடுத்து விடலாம். அதிக எண்ணெயும் ஆகாது. தக்காளித் தொக்குடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
வசந்தா வீரராகவன், சான் ஹோசே, கலிஃபோர்னியா |