ரவை லட்டு
தேவையான பொருட்கள்:
ரவை - 4 கப்
சர்க்கரை - 4 கப்
நெய் - 1 பெரிய கப்
முந்திரி பருப்பு - 12
ஏலக்காய் - சிறிதளவு

செய்முறை
ரவையை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து எடுத்து நைசாக பொடி செய்து கொள்ளவும். சர்க்கரையையும் அரைத்து ஒன்றாகப் போடவும். பிறகு முந்திரி வறுத்துப் போட்டு, ஏலக்காய்ப் பொடியும் போடவும். நெய்யை சுடவைத்து அதில் ஊற்றி உருண்டை பிடிக்கவும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com