இந்தியாவின் 70வது சுதந்திர தின அணிவகுப்பில் பாரதி தமிழ்ச் சங்கம் பங்கேற்றது. தமிழ் நாட்டுக் கோவில்களின் சிறப்புகளையும் கலைகளையும் வெளிப்படுத்தும் விதமாக அணிவகுப்பில் தேரோட்டம் நடைபெறச் செய்தது. 18 அடி உயரம் கொண்ட தேர் ஒன்றின் மாதிரியைத் தலைவர் ராம், உபதலைவர் ஜெ. வெங்கட்ரமணி, செயலாளர் முரளி ஆகியோர் வடிவமைத்தனர். தேரின் தெய்வீகம் மற்றும் கலைநுட்பம் குறித்தும் பலரும் ஆர்வத்தோடு கேட்டறிந்தனர். இந்தத் தேர் பின்னர் ஃப்ரீமான்ட் சித்திவிநாயகர் கோவிலுக்குச் சங்கத்தின் சார்பாக அளிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு: www.bharatitamilsangam.org
திருமலை ராஜன், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |