TNF ஒஹையோ: நெடுநடை
ஆகஸ்ட் 14, 2016 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் நடுவண் ஒஹையோ கிளை (Tamil Nadu Foundation-Central Ohio Chapter) இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நெடுநடை நிகழ்ச்சியை நடத்தியது. நாகப்பட்டினம் மாவட்ட அரசுப்பள்ளிகளில் TNF-ABC திட்டத்தின் மூலம் படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு அறக்கட்டளை உதவிவருகிறது. இத்திட்டத்திற்கு உதவும் பொருட்டு நடத்தப்பட்ட இந்த நெடுநடையில் கிட்டத்தட்ட இருநூறு அன்பர்கள் பங்கேற்று, கொட்டிய மழையிலும் நடந்தது மறக்க முடியாத நெகிழ்வு. நிகழ்ச்சியின் வாயிலாகக் கிட்டத்தட்ட $7,000 நிதிதிரட்டப்பட்டது.

தொடர்பு கொள்ள:
மின்னஞ்சல்: tnf.centralohio@gmail.com
இணையதளம்: tnfusa.org/chapter/central-ohio/
முகநூல்: Facebook/TamilNaduFoundationUsa

மணி பெரியகருப்பன்,
டப்ளின், ஒஹையோ

© TamilOnline.com