ஆகஸ்ட் 21, 2016 அன்று AIM For Seva (AIM-S) சர்வதேச அமைப்பு, 'Meera The Soul Divine' என்ற நாட்டிய நாடகத்தை சான் ஹோசேயிலுள்ள கலிஃபோர்னியா தியேட்டரில் நடத்தியது. இந்தியாவின் கிராமத்துச் சிறாருக்குத் தொண்டாற்ற நிதி வழங்கும் பொருட்டு இது நடத்தப்படுகிறது. அமெரிக்காவின் பல பகுதிகளிலும் நடைபெற உள்ளது.
இளவரசியாகப் பிறந்து, ஆடம்பரத்தைத் துறந்து, கண்ணனனை மானசீகக் காதலனாய் கொண்ட மீராவின் தெய்வீக வாழ்க்கை கதை! பத்மஸ்ரீ சித்ரா விஸ்வேஸ்வரன், ஆஸ்கார் வேட்பாளர் பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் சிதம்பரம் நடனப்பள்ளி மாணவ மாணவியர் இணைந்து இதனை அளித்தனர். மீராவின் குழந்தைப்பருவம் முதல், முதிர்பருவம் வரை, நான்கு பகுதிகள் பிரித்து, நான்கு மகளிரால் சித்தரிக்கப்பட்டன. ஒவ்வொருவரும் நேர்த்தியான ஆடல், அபிநயம் ஆகியவற்றால் ஆன்மீகத்தில் லயிக்க வைத்தார்கள். காளிங்க நர்த்தனம் மிக அழகாகச் சித்திரிக்கப்பட்டிருந்தது.
AIM-S இந்திய கிராமங்களில் வசதிகுன்றிய குழந்தைகளுக்கு பள்ளிக்கருகில் தங்குமிடம், ஆரோக்கிய உணவு, கல்விப்பொருட்கள், மருத்துவம், சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த பயிற்சிகளை அளிக்கிறது. ஆதிவாசி மற்றும் வனவாசிச் சிறுவர்கள் இதனால் பயனடைகிறார்கள். பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டு, 2020ம் ஆண்டுக்குள் 200 விடுதிகள் என்னும் இலக்கைநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்.
எல்லா நன்கொடைகளுக்கும் அமெரிக்க IRS பிரிவு 501 © (3) கீழ் வருமான வரிவிலக்கு உண்டு. தாராளமாக நன்கொடை கொடுத்து, மீரா நாட்டிய நாடகத்தைத் தங்கள் அருகிலுள்ள பகுதிக்கு வருகையில் கண்டுகளியுங்கள். அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.
நிகழ்ச்சி தேதி/இடம் அறிய: meerathesouldivine.com/schedule-and-venues.html ட்விட்டர்: @aim4seva முகநூல்: AIMforSevaBayArea, Meera - The Soul Divine வலைமனைகள்: www.aimforsevabayarea.org, www.aimforseva.org
ராஜி ஸ்ரீதர், சான் ஹோசே, கலிஃபோர்னியா. |