ஃபிலடெல்பியா: TNF இன்னிசை ஈகை விழா
அக்டோபர் 15, 2016 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் ஃபிலடெல்பியா கிளை இன்னிசை ஈகை விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்திலிருந்து கோபால் சப்தஸ்வரன் இன்னிசைக் குழுவினரும், சூப்பர் சிங்கர்ஸ் ஹரிஹரன், சாய் சரண், சௌமியா, பாடகி உஷாராஜ், விஜய் டி.வி.யின் வடிவேல் பாலாஜி மற்றும் திவாகர் இதில் பங்குகொள்கின்றனர். தமிழகத்தில் TNF மூலம் சேவைசெய்த இளையோர் தங்கள் அனுபவங்களைத் தம்மொத்தவருடன் பகிர்ந்துகொள்ளும் பட்டறையும் நடத்தப்பெறும். ஈகைவிழாவில் திரட்டப்பெறும் நிதி தமிழகத்தின் பத்து மாவட்ட அரசுப்பள்ளிகளில் அமல்படுத்தி வரும் TNF-ABC கல்வித் திட்டத்திற்கும், சீர்காழி மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான அன்பாலயம் சிறப்புப் பள்ளிக்கும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு: tnfusa.org/philadelphia-charity-festival
மின்னஞ்சல்: phillytnfchapter@gmail.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com