களத்தூர் கிராமம்


இளையராஜா இசையமைக்கும் 101வது படம் களத்தூர் கிராமம். பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணுவின் மகன் மிதுன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரஜினி மஹாதேவ் நடிக்கிறார். இவர்களுடன் கிஷோர், யக்ஞா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாடல்களை நா. முத்துக்குமார், தாமரை, மதன் கார்க்கி ஆகியோர் எழுதியுள்ளனர். கதை எழுதி இயக்குகிறார் சரண் K. அத்வைதன். இளையராஜாவையே கண்கலங்கச் செய்த இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com