8 தோட்டாக்கள்


இயக்குநர் மிஷ்கினின் உதவியாளர் ஸ்ரீகணேஷ் இயக்கும் படம் '8 தோட்டாக்கள்'. வெற்றி, அபர்ணா முரளி நாயக, நாயகியாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் நாசர், எம்.எஸ். பாஸ்கர், டி. சிவா, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசை. "ஒரு துப்பாக்கியில் எட்டு தோட்டாக்கள் இருந்தாலும் அந்த எட்டும் வெவ்வேறு இலக்குகளை நோக்கித்தான் பாயும். இதுதான் இந்தப் படத்தின் ஒருவரிக் கதை" என்கிறார் இயக்குநர். பரபரப்பான க்ரைம் த்ரில்லராக உருவாகி வருகிறது 8 தோட்டாக்கள்.

அரவிந்த்

© TamilOnline.com