நிபுணன்
அருண் வைத்தியநாதன் இயக்கும் புதியபடம் நிபுணன். துப்பறியும் நிபுணராக அர்ஜுன் நடிக்க, உடன் பணியாற்றும் அதிகாரிகள் வேடத்தில் பிரசன்னாவும், வரலட்சுமியும் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் சுமன்,

ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். எஸ். நவீன் இசையமைக்கிறார். தமிழ் தவிரக் கன்னடத்தில் இப்படம் 'விஸ்மயா' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இப்படம் பற்றி

அருண், "அர்ஜுன், இதுவரையில் ஏற்காத ஒரு புதிய கேரக்டரில் இந்தப் படத்தில் நடிக்கிறார். பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகளோடும், திரில்லர் காட்சிகளோடும் தயாராகி வருகிறது" என்கிறார்.



அரவிந்த்

© TamilOnline.com