கேன்சர் இன்ஸ்டிட்யூட் ஃபவுண்டேஷன் (CIF) நடத்தும் ‘கிச்சன் கில்லாடி’ போட்டிகள் இந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி சன்னிவேல் இந்துக்கோவில் அரங்கத்தில் நடைபெறும். புற்றுநோயை எதிர்க்கும் தன்மைகொண்ட தக்காளியைக் கொண்டு சத்தான உணவைத் தயாரித்து, தங்கநாணயங்களைப் பரிசாக வெல்ல இதுவொரு அரிய வாய்ப்பு.
இந்த அறக்கட்டளை ஒரு லாபநோக்கற்ற தன்னார்வ நிறுவனம். பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் இது நிதி திரட்டி, சென்னை அடையாறிலுள்ள கேன்சர் இன்ஸ்டிட்யூட்டுக்கு நன்கொடை அளிப்பதன்மூலம், அங்குவரும் ஏழை நோயாளிகள் இலவசமாகச் சிகிச்சைபெற உதவுகிறது.
கிச்சன் கில்லாடியில் பங்கேற்க நீங்கள் பதிவுசெய்ய வேண்டிய வலைமனை: www.cifwia.org
செய்திக்குறிப்பிலிருந்து |