ஓமப்பொடி உருண்டை
தேவையான பொருட்கள்
கடலைமாவு - 1 கிண்ணம்
அரிசிமாவு - 1 மேசைக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 2 மேசைக்கரண்டி
பாதாம்பருப்பு - 8
முந்திரி பருப்பு - 8-10
பொட்டுக்கடலை - 1/4 கிண்ணம்
வெல்லத்தூள் (அ) சர்க்கரைப்பொடி - 3/4 கிண்ணம்
ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
நெய் - 1/2 கிண்ணம்
எண்ணெய் - ஓமப்பொடி செய்ய

செய்முறை
கடலைமாவுடன் அரிசிமாவு கலந்து உப்புப் போடாமல், சிறிது நெய்விட்டு எண்ணெயில் ஓமப்பொடி செய்து, ரொம்பத் தூளாகாமல் நொறுக்கி வைத்துக்கொள்ளவும். பொட்டுக்கடலை, முந்திரி, பாதாம் இவற்றைச் சிவக்க வாணலியில் வறுத்துக்கொண்டு தேங்காயையும் சிவக்க வறுத்து, இவை எல்லாவற்றையும் மிக்சியில் அரைக்கவும். இதை நொறுக்கிய ஓமப்பொடியுடன் போட்டு ஏலக்காய், முந்திரிப்பருப்பு நெய்யில் கொஞ்சம் வறுத்துப்போட்டுக் கலந்துகொண்டு வெல்லத்தூள் போட்டு நெய் சுடவைத்து ஊற்றி ரவாலாடு போல உருண்டை பிடிக்கவும். சர்க்கரை போட்டும் பிடிக்கலாம்.

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி

© TamilOnline.com