டென்னசி: 'நீங்களே செய்யலாம்' முகாம்
13 வயது சித்தார்த் பாபுவும், 14 வயது சிவகுமாரும் 'நீங்களே செய்யலாம்' முகாம் ஒன்றை டென்னசி தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் ஜூலை 11 முதல் 13 வரை நடத்தினர். சங்க உறுப்பினர்களின் இளையோர், எலக்ட்ரானிக் கருவிகளைச் செய்யக் கற்பதற்கான இந்த முகாம் நேஷ்வில்லில் நடைபெற்றது. எலக்ட்ரானிக் சர்க்யுட், மின்சாரம், பற்றவைத்தல் (soldering) ஆகியவை குறித்து இதில் அவர்கள் கற்றனர். இறுதிநாளில், தாம் கற்ற கோட்பாடுகளை உள்ளடக்கிய சுழலும் LED விளக்குகளை இவர்கள் வடிவமைத்தனர். இங்கு கற்க வந்தோருக்குப் பின்னணியில் பெற்றோர் ஏற்பாட்டில் உதவினர்.

அங்கை சிவகுமார்,
டென்னசி

© TamilOnline.com