பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதியின் மகள் சரண்யா புதிய நாயகியாக 'பாரிஜாதம்' படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார்.
பாக்யராஜின் அண்ணன் மகள் மஞ்சுளா தயாரிக்கவிருக்கும் இப்படத்தை பாக்யராஜ் இயக்குவார். 'கனா கண்டேன்' புகழ் பிருதிவிராஜ் நாயகன். படத்தின் நாயக, நாயகி அறிமுக விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
எம்.காம். பட்டதாரியான சரண்யா அம்மா பூர்ணிமாவைப் போல் நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்கிறார்.
தொகுப்பு:கேடிஸ்ரீ |