சங்கர நேத்ராலயா வழங்கும் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி நூற்றாண்டு விழா
பாரதத்தின் இசைவரலாற்றில் தனக்கென தனிச் சிம்மாசனத்தை ஏற்படுத்திக்கொண்டு கோலோச்சி வந்த திருமதி எம் எஸ். அம்மா அவர்களின் சமூகப்பணி, அவரது இசைப்பணிக்கு நிகரான ஒன்றாகும். அவர்களின் இசை நிகழ்ச்சிகளால் கிடைத்த நிதி அனைத்துமே வறுமை, பஞ்சம், பிணி, இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்குப் புனர்வாழ்வு, மருத்துவம், அறிவியல், ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமயத்தொண்டு ஆகியவற்றுக்காகச் செலவிடப்பட்டது. புதுதில்லி, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் எம்.எஸ். அம்மாவின் இசைநிகழ்ச்சிகள் பலமுறை நடத்தப்பட்டு அந்த நிதி, சங்கர நேத்ராலயாவுக்கு வழங்கப்பட்டது. அவர்களின் 'சூர்தாஸ் பஜன்ஸ்', 'சங்கர ஸ்துதி' மற்றும் பாரதியார் பாடல்களின் இசைத்தட்டுகள் மற்றும் குறுந்தகடுகளின் ராயல்டிகள் சங்கர நேத்ராலயாவின் சேவைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

எம்.எஸ்.அம்மா அவர்களின் புகழ்பாடும் சென்னை சங்கர நேத்ராலயா, அவர்களின் நூற்றாண்டினை அமெரிக்காவில் உள்ள சங்கர நேத்ராலயா ஆப்தால்மிக் மிஷன் டிரஸ்ட்டுடன் இணைந்து கீழ்க்கண்ட நிகழ்வுகளோடு சிறப்பாகக் கொண்டாடுகிறது.

ஏழை எளியோர் 3000 பேருக்கு இலவச கேடராக்ட் ஆபரேஷன் செய்வதற்கான நிதி திரட்டுவதற்காக அமெரிக்காவின் 6 நகரங்களில் செப்டம்பர் 2016ல், பத்மபூஷன் சங்கீத கலாநிதி ஸ்ரீமதி சுதா ரகுநாதன் அவர்களின் கச்சேரிகளை அமெரிக்காவின் சங்கர நேத்ராலயா ஆப்தால்மிக் மிஷன் டிரஸ்ட் ஏற்பாடு செய்துள்ளது.

உலகப்புகழ்பெற்ற திரு. ஜுபின் மேத்தா அவர்களுடன் அமெரிக்க ஃபில்ஹார்மோனிக் மற்றும் அனுஷ்கா சங்கர் இணைந்து வழங்கும் இசைக்கச்சேரி நவம்பர் 5, 2016 அன்று நியூயார்க்கில் உள்ள உலகப் புகழ்பெற்ற லிங்கன் சென்டரில் நடக்கவுள்ளது.

தவிர, எம்.எஸ் அம்மாவின் வாழ்வில் மறக்கவொண்ணா நிகழ்வுகளின் புகைப்படக் கண்காட்சி நடத்துவது; அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் எம்.எஸ். அம்மாவின் நினைவாக அவரது பெயரில் கர்நாடக இசைக்கென ஓர் பீடம் அமைப்பது; அமெரிக்காவில் அவரது நினைவுத் தபால்தலை வெளியிடுவது ஆகியவையும் திட்டமிடப்பட்டுள்ளன.

எம்.எஸ். அம்மா நூற்றாண்டு விழா, சிறப்பு நன்கொடை நிகழ்ச்சியாக சங்கீத கலாநிதி பத்மபூஷண் சுதா ரகுநாதன் அவர்களின் இசைக்கச்சேரி விவரங்கள் பின்வருமாறு:

செப்டம்பர் 3, 2016
இடம்: அட்லாண்டா ஹிந்துக் கோவில்; 585. G.A. ஹைவே 85, ரிவர்டேல், GA 30274
தொடர்புக்கு: சேஷ சர்மா - 404.664.0808; மூர்த்தி ராக்கெபள்ளி - 678.458.9646; பாலாரெட்டி இந்ததூர்த்தி - 770.569.5817

செப்டம்பர் 5, 2016
இடம்: கேப்ரில்லோ ஹை ஆடிட்டோரியம், 2001 சான்ட ஃபே அவென்யூ லாங்பீச், CA 90810
தொடர்புக்கு: பார்த்தா சக்கரவர்த்தி - 510.299.5555; ராஜா கிருஷ்ணமூர்த்தி - 562.381.3060

செப்டம்பர் 10, 2016
இடம்: சாமா ரதி ஆடிட்டோரியம்,.ஹிந்து டெம்பிள் ஆஃப் கிரேட்டர் சிகாகோ, லெமான்ட், சிகாகோ
தொடர்புக்கு: டாக்டர் ராஜ் ராஜாராம் - 630.915.6176; சுதாகர் மாட்டு - 630.427.1444

செப்டம்பர் 11, 2016
இடம்: யூனிட்டி சர்ச் ஆஃப் டாலஸ்; 6525, ஃபாரெஸ்ட் லேன், டாலஸ், டெக்சஸ் 75230
தொடர்புக்கு: சுரேஷ் தளபதி - 817.821.0280; சந்தானம் முள்ளூர் - 214.893.3043; சிங்கர் பிரபு - 469.328.6745; வாணி ஈஸ்வரா - 469.293..6264

செப்டம்பர் 17, 2016
இடம்: ஏசியா சொசைட்டி டெக்சஸ் சென்டர், 1370, செளத்மோர் பொலிவார்ட், ஹூஸ்டன், டெக்சஸ் 77004, மியூசியம் டிஸ்ட்ரிக்ட்
தொடர்புக்கு: கே.எஸ். வாசன் - 281.265.7745; சாம் கண்ணப்பன் - 713.724.4399; லீலா கிருஷ்ணமூர்த்தி - 832.654.9444

செப்டம்பர் 18, 2016
இடம்: வாஷிங்டன்
தொடர்புக்கு: கே.ஜி. வெங்கட்ராமன் - 301.646.1232; எஸ்.வி. ஆச்சார்யா - 8554NETHRA (TOLL FREE); சங்கர் ஐயர் - 571.214.1545

சங்கர நேத்ராலாயா OM டிரஸ்டுக்கு அளிக்கப்படும் எல்லா நன்கொடைகளுக்கும் 501(c)(3) பிரிவின்கீழ் அமெரிக்காவில் வரிவிலக்கு உண்டு.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்க:
Shri S V Acharya, President, Sankara Nethralaya Ophthalmic Mission Trust, inc, 9710 Traville Gateway Drive, No.392, Rockville, MD 20850, USA

ஆன்லைனில் நன்கொடை அளிக்க:
www.sankaranethralayausa.org
www.supportsankaranethralaya.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com