கணிதப் புதிர்கள்
1) 6 + 2 = 48; 7 + 3 = 410; 8 + 4 = 412 என்றால் 9 + 5 = ?

2) ஐந்து மூன்றுகளைப் பயன்படுத்தி 31ஐ விடையாகக் கொண்டுவர முடியுமா?

3) மூன்று இலக்கங்களைப் பயன்படுத்தி எழுதும் மிகப்பெரிய எண் எது?

4) 5 கோழிகள் 5 கிண்ண தானியங்களைச் சாப்பிட 5 நிமிடம் எடுத்துக்கொண்டால் நூறு கோழிகள், நூறு கிண்ணங்களில் உள்ள தானியங்களைச் சாப்பிட எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளும் ?

5) ஒரு பூங்காவில் சில குழந்தைகள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 3 ஆப்பிள் வீதம் கொடுத்ததில் ஐந்து ஆப்பிள்கள் மீதம் இருந்தன. ஒவ்வொருவருக்கும் தலா நான்கு ஆப்பிள் வீதம் கொடுத்ததில் ஐந்து ஆப்பிள்கள் பற்றாக்குறையாக ஆனது. அப்படியென்றால் ஆப்பிள்கள் எத்தனை, குழந்தைகள் எத்தனை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com