அரங்கேற்றம்: நித்யா கணேஷ்
ஜூன் 4, 2016 அன்று சான் ஹேசே CET அரங்கில் செல்வி. நித்யா கணேஷின் கர்நாடக வாய்ப்பாட்டு அரங்கேற்றம் நடைபெற்றது. இவர் ஸ்ரீ லலிதகான வித்யாலயாவின் குரு லதா ஸ்ரீராம் அவர்களிடம் 13 ஆண்டுகளாக இசை பயின்றுவருகிறார்.

முதலில், நித்யா "தர்மசம்வர்தனி" என்ற கல்யாணிராக வர்ணத்திற்கு அழகாகக் கல்பனா ஸ்வரம் பாடினார். பிறகு, "பாஹிமாம் பார்வதி" என்ற கீர்த்தனைக்கு நேர்த்தியாகக் கல்பனா ஸ்வரத்தில் ஜண்டையை பயன்படுத்தி மோகன ராகத்திற்கு மெருகூட்டினார். "விடமு சேயாவே" என்ற ராமர் கீர்த்தனைக்கு மிருதங்கமா, வயலினா, இல்லை நித்யாவின் வாய்ப்பாட்டா - எது நன்றாக இருந்தது என்று வியக்கும்வண்ணம் அருமையாக அமைந்தது.

பாலமுரளி கிருஷ்ணாவின் கதனகுதூகல ராகத் தில்லானாவை நித்யா சரளமாகப் பாடினார். திருப்புகழில் அவருடைய தமிழ் உச்சரிப்பு தெளிவாக இருந்தது. பின்னர், மங்களத்துடன் அரங்கேற்றம் இனிதே நிறைவுற்றது.

திரு. ரவீந்திரபாரதி ஸ்ரீதரன் (மிருதங்கம்), திருமதி. சுசீலா நரசிம்மன் (வயலின்) இருவரும் கச்சேரிக்கு நன்கு வலுவூட்டினர்.

நிகழ்ச்சியின் நிறைவில் குரு லதா ஸ்ரீராம், வித்யாலயா சார்பாக நித்யாவிற்கு ஒரு பதக்கம் அளித்தார். திருமதி லதாவின் கணவர் திரு ஸ்ரீராம் அவர்கள் நித்யாவைப் பாராட்டிப் பேசினார்.

சுருதி சொக்கலிங்கம்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com