ஆளுக்கு பாதி 50-50


சேது நாயகனாக நடிக்கும் படம் ஆளுக்கு பாதி 50-50. நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார். இவர்களுடன் மயில்சாமி, பட்டிமன்றம் ராஜா, லொள்ளு சபா சுவாமிநாதன், மதன்பாப், ஜான் விஜய், 'நான் கடவுள்' ராஜேந்திரன், முனிஷ்கான், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் கதையை அலெக்ஸ் எழுத, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் கிருஷ்ணசாய். பாடல்களை நா. முத்துகுமார் எழுத, இசையமைக்கிறார் தரண். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com