கேரட் வடை
தேவையான பொருட்கள்
அரிசி - 1 தம்ளர்
கடலைப்பருப்பு - 3/4 தம்ளர்
துவரம் பருப்பு - 1/2 தம்ளர்
பாசிப்பருப்பு - 1 கைப்பிடி
பச்சைமிளகாய் - 4
வற்றல்மிளகாய் - 6 (அ) 7
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் - 1/4 மூடி
காரட் - 2
கடுகு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
அரிசியைக் கழுவி ஊறவைக்கவும். பருப்புகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஊறவைக்கவும். கேரட்டை நன்றாகத் துருவிக்கொள்ளவும். தேங்காயைச் சிறு சிறு துண்டுகளாக்கி வைத்துக்கொள்ளவும். அரைமணி நேரம் கழித்து அரிசியுடன் வற்றல் மிளகாயையும் பச்சை மிளகாயையும் மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும். பிறகு அதிலேயே மூன்று பருப்புகளையும் தண்ணீரைப் பிழிந்துபோட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும். துருவிய கேரட்டையும் தேங்காய்த் துண்டுகளையும் போடவும். வாணலியில் பெருங்காயம், கடுகு, கறிவேப்பிலை தாளித்து மாவுடன் கலக்கவும். உப்பு சேர்க்கவும். மாவு ரொம்பக் கெட்டியாக இல்லாமல் சிறிது தளர்ந்து இருக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் வைத்து நன்றாகக் காய்ந்ததும் கரண்டியால் மாவை வடைகளாகத் தட்டிப் போடவும்.

அடுப்பைப் பெரிதாக்கி இரண்டு முறை திருப்பிப்போட்டு சிவந்ததும் அடுப்பை நிதானமாக வைத்து, பொன்னிறமாக ஆனவுடன் எடுக்கவும்.

வசந்தா வீரராகவன்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com