சான் அன்டோனியோ தமிழ்ச்சங்கம்: கிரிக்கெட் போட்டி
சான் அன்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. டென்னிஸ் பந்து வைத்து விளையாடப்படும் இந்தப் போட்டியில் 17 அணிகள் பங்கேற்றன. டாம் ஸ்லிக் பார்க் மைதானத்தில் ஏப்ரல் 30 முதல் நடைபெறும் இந்தப் போட்டிகளின் இறுதிச்சுற்று ஜுன் 4ம் தேதி நடைபெற உள்ளது. Amigos மற்றும் Avengers அணிகள் இறுதிப்போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளன.

சங்கத்தின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் இந்தப் போட்டிக்காகச் சற்றொப்ப 2000 டாலர்வரை தன்னார்வலர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

தமிழ்ச்சங்கத்தைப் பற்றி புதியவர்கள் அறியவும், புதிய உறுப்பினர் சேர்க்கைக்கும் இந்த கிரிக்கெட் போட்டி உதவிகரமாக அமைந்துள்ளது.

ராஜகுரு,
சான் அன்டோனியோ, டெக்சஸ்

© TamilOnline.com