NETS: சித்திரை விழா
மே 14, 2016 சனிக்கிழமையன்று ஆஷ்லாந்து உயர்நிலைப் பள்ளியில் நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கத்தின் சித்திரை விழா நடைபெற்றது. முதலாவதாக திருமதி. வைதேஹி ஹெர்பெர்ட் அவர்கள் சங்கத்தமிழ் பயிலரங்கம் நடத்தினார்கள். இதில் சங்கப் பாடல்களின் பெருமையையும், அவற்றை எளிதாகப் படிக்கும் முறையையும் சில பாடல்களின் பொருளையும் சுவைபடக் கூறினார். அடுத்தநாளும் பயிலரங்கம் தொடர்ந்தது.

தேவன் குழுவினர் மெல்லிசை நிகழ்ச்சியில், சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர் சீனியர் என்று இரு பிரிவுகளில் உள்ளூர் திறமைசாலிகள் பங்கேற்றனர். திரு. தேவன் ஏகாம்பரம், திரு. ஆலாப் ராஜு, திரு. பிரவீண் சாய்வி ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். வெற்றிபெற்றோருக்கும் பங்கேற்றோருக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

மெல்லிசை மன்னர் M.S.V. முதல், இளையராஜா, A.R. ரஹ்மான், அனிருத்வரை அனைத்துப் பாடல்களும் இனிமையாக இருந்தன. குழுவில் திருமதி. ஹரிணி, கார்த்திக் மற்றும் ஜெரேமி ஆகியோரின் கருவியிசை மிகுந்த கைதட்டல் பெற்றது.

TNF அறக்கட்டளையின் சார்பாக திரு. சோமலெ சோமசுந்தரம் மற்றும் திருமதி. லக்ஷ்மி முகுநூர், சங்கத்தின் வெள்ள நிவாரணநிதி உதவியைப் பாராட்டித் தலைவர். திருமதி. பமிலா வெங்கட் மற்றும் குழுவினருக்குச் சான்றிதழ் வழங்கினார்கள்.

பமிலா வெங்கட்,
பாஸ்டன்

© TamilOnline.com