TNF கனெக்டிகட்: அன்னையர் தினம்
மே 14, 2016 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் கனெக்டிகட் மாநிலப்பிரிவு நடனநிகழ்ச்சி ஒன்றை நிதிதிரட்டும் பொருட்டு வழங்கியது. மாநிலத்தின் நடன ஆசிரியைகள் ஒன்றுகூடி 'அன்னையர் தின விழா'வைக் கொண்டாடினர். விழாவில் மாணவிகளும், ஆசிரியைகளும் அற்புதமாக நடனமாடினர். தொடக்க நிகழ்ச்சியாகக் கைத்தல நிறைகனி என்ற விநாயகர் பாடலை மாணவிகள் அருமையாகப் பாடினர். தொடர்ந்து விநாயக வந்தன பரதமும், ஜதீஸ்வரமும், 'தேவி நீயே துணை' பதமும், பெங்காலி நடனமும், கதனகுதூகல தில்லானாவும் குதூகலமாய் அரங்கேறின.

விழாவில் நான்கு அன்னையருக்குச் சிறந்த சமூகசேவை விருதுகள் வழங்கப்பட்டன. திருமதியர் கலா பிரசாத், ஜெயந்தி சேஷன், ஶ்ரீமதி ராகவன், உமா சேகர் ஆகியோர் இசை, நாட்டியம், தமிழ்ச்சங்கம், நிதி திரட்டும் பணி என்று வெவ்வேறு பிரிவுகளில் சேவை விருதுகளைப் பெற்றனர். பின்னர் அறக்கட்டளை பற்றி திரு. சோமலெ சோமசுந்தரம் உரையாற்றினார். அன்னையின் அருமை குறித்து திரு. பரத் சம்பத் அழகாகப் பாடினார். இரண்டாவது பகுதியில் மோகினி ஆட்டம், நடேச கவுத்துவம், ராச நடனம், பாரதியின் சக்திக்கூத்து, தில்லானா ஆகியவற்றுடன் விழா நிறைவெய்தியது.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்,
கனெக்டிகட்

© TamilOnline.com