லிவர்மோர் ஆலயம்: கைலாச வைபோற்சவம்
ஜூன் 25, 2016 சனிக்கிழமையன்று காலை 7.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரை லிவர்மோர் ஹிந்து சமூக மற்றும் கலாசாரப் பண்பாட்டு மையம் (HCCC-சிவா விஷ்ணு ஆலயம்) நிகழ்த்தவுள்ள கைலாச வைபோற்சவம், ஃப்ரீமான்ட் நகரிலுள்ள வாஷிங்டன் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் இடம்பெற இருப்பவை: 12 ஜோதிர்லிங்க ஆராதனை மற்றும் வில்வ அர்ச்சனை; 108 குடும்பங்கள் பங்கேற்கும் கேதாரகௌரி விரதபூஜை; உடல், உள்ளத் தூய்மைக்கு மஹந்யாசம், சாந்தி பூஜை (ஸ்ரீருத்ர பாராயணம்); 108 சங்காபிஷேகம்; கௌரி சங்கர திருக்கல்யாணம் மற்றும் ஊஞ்சல் சேவை

தொடர்புக்கு:
பிரபாகர் பன்னூரி: 510-585-7237; வீரு உப்பலா: 510-418-4292; வினய் கலேஷ்: 510-509-4080; கார்த்திக் சுப்ரமணி: 925-577-0442; ரவிஷங்கர்: 408-318-2640
ஆலய அலுவலகம்: 925-449-6255

கார்த்திக் சுப்ரமணி

© TamilOnline.com