செய்


நகுல் நாயகனாகவும் ஆஞ்சல் நாயகியாகவும் நடிக்கும் படம் செய். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ், நாசர் நடிக்கின்றனர். உடன் முன்னணி நடிக, நடிகையர்கள் நடிக்கின்றனர். பல ஆல்பங்களுக்கு இசையமைத்துள்ள நிக்ஸ்லோபஸ் இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மலையாளத்தில் 'சாரதி' என்னும் வெற்றிப் படத்தை இயக்கிய கோபாலன் மனோஜ் இப்படத்தில் இயக்குநராகத் தமிழில் அறிமுகமாகிறார். கதை, திரைக்கதையை ராஜேஷ் கே. ராமன் எழுதியிருக்கிறார். "ஒரு பெரிய நடிகர் ஆக நினைக்கும் இளைஞனும், ஒரு பெரிய இயக்குநர் ஆக விரும்பும் ஒரு பெண்ணும் சந்திக்கிறார்கள். அந்தச் சந்திப்பு அவர்களது வாழ்க்கையில் என்ன திருப்புமுனையை உண்டாக்குகிறது என்பதைச் சொல்லவருகிறது செய். சினிமாக்காரர்களைப் பற்றி சினிமாக்காரர்களே எடுக்கும் படம் இது.

அரவிந்த்

© TamilOnline.com