ஜூலியும் நாலு பேரும்


மேற்கண்ட தலைப்பில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. ஜூலி என்பது பெண்ணல்ல; நாய். விஜய் டி.வி. புகழ் அமுதவாணன் மற்றும் ஜார்ஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நாயகியாக ஜம்முவைச் சேர்ந்த ரீனா அறிமுகமாகிறார். ரகு ஸ்ரவன் குமார் அறிமுகமாகிறார். ஆர்.வி. சதீஷ் இயக்குகிறார். "அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட பீகிள் வகையைச் சேர்ந்த லக்கி என்ற நாய்தான் படத்தின் ஹீரோ. சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தலைப் பற்றிய படம் இது. முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட காமெடி படம்" என்கிறார் இயக்குனர். அது சரி, அந்த நாலு பேரு யாருங்க!

அரவிந்த்

© TamilOnline.com