பாபாஜி அறக்கட்டளை: கோடைக்கால மாணவர் தன்னார்வச் சேவை வாய்ப்பு
அமெரிக்காவிலுள்ள இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்தியாவின் K-12 பள்ளியில் கோடைக்காலச் சேவை செய்யும் வாய்ப்புகளை சென்னை சோழிங்கநல்லூர் பழைய மகாபலிபுரம் சாலையிலுள்ள பாபாஜி வித்யாஸ்ரம் அறிவித்துள்ளது. உயர்நிலைப்பள்ளி மற்றும் பட்ட வகுப்புகளில் பயில்வோர் பின்கண்டவற்றில் தன்னார்வத் தொண்டு செய்யலாம்: விளையாட்டு, அறிவியல், பொறியியல், ரொபோடிக்ஸ், கலைகள். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு முழுமையான உள்ளிருப்புப் பயிற்சி (Internship) தவிர சமுதாய சேவை சான்றிதழ் தரப்படும். மிகச்சிறப்பாகத் தொண்டாற்றுவோருக்கு பள்ளித் தலைவரின் பரிந்துரைக் கடிதமும் தரப்படும். தமக்கு ஆர்வமுள்ள துறை, சாதனைகள், பள்ளியில் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்ற விவரங்களோடு இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்: internship@babajividhyashram.org

உலகெங்கிலுமிருந்து வெவ்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றோரை மாணவர்களிடம் உரையாற்றவும் பள்ளி அழைக்கிறது. புகைப்படம், திரவ இயக்கவியல், விளையாட்டு மருத்துவம் போன்ற பல்வேறு துறைவல்லுனர்கள் இப்பள்ளி மாணவர்களுடன் தமது அறிவைச் சுவைபடப் பகிர்ந்துகொள்ள. வருவாய் கருதாது, சமுதாயத்துக்குத் திருப்பித் தர இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அவர்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், நல்ல பேச்சாளர்களாகவும், இளையோருக்கு உற்சாகமூட்டும் எண்ணம் கொண்டவர்களாக இருக்கவேண்டும். ஆர்வமுள்ளோர் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: townhall@babajividhyashram.org பாபாஜி அறக்கட்டளை லாபநோக்கற்ற, இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற, 2AA & Sec 80G பிரிவுகளின்கீழ் வருமான வரிவிலக்குப் பெற்ற அமைப்பாகும்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com