1) பத்தொன்பதிலிருந்து ஒன்றைக் கழித்தால் இருபது வருகிறது. எப்படி என்று சொல்ல முடியுமா?
2) இரண்டு கம்பங்களுக்கு இடையே உள்ள தூரம் 10 அடி. அப்படியென்றால் 100 அடிவரை நடுவதற்கு எத்தனை கம்பங்கள் தேவைப்படும்?
3) 3 என்ற எண்ணை 5 முறை பயன்படுத்தி மொத்தக் கூடுதல் 31 வரச் செய்ய இயலுமா?
4) ஒரு பண்ணையில் இருக்கும் விலங்கு மற்றும் பறவைகளின் தலையை எண்ணினால் 74 வருகிறது. கால்களை எண்ணினால் 196 வருகிறது. அப்படியானால் பறவைகள் எத்தனை, விலங்குகள் எத்தனை?
அரவிந்த்
விடைகள்1) இப்படி: XIX இதிலிருந்து I என்பதை நீக்கினால் வருவது XX
2) 11
3) இயலும். 3^3 + 3 + (3/3) = 27 + 3 + 1 = 31
4) விலங்குகள் = x என்க. விலங்குளுக்கு நான்கு கால்கள்; = 4x.
பறவைகள் = y என்க. பறவைகளுக்கு இரண்டு கால்கள். = 2y.
4x + 2y = 196 = 2x + y = 98
2x + y = 98 (-)
x + y = 74
----------
x = 24
y = 98 - 2x = 98 - 2(24) = 98 - 48 = 50.
ஆகவே 24 விலங்குகள். 50 பறவைகள் அந்தப் பண்ணையில் இருந்தன.