கோபி மசாலா
தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் (சுமாரான அளவு) - 1
தக்காளி - 2
சீரகம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்துமல்லிவிதைத் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து

அரைத்துக்கொள்ள:
வெங்காயம் - 2
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 6 (விருப்பமானால்)

செய்முறை
காலிஃப்ளவரைக் கழுவிச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயைச் சூடாக்கி சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து வதக்கி, அரைத்து வைத்துள்ளவற்றையும் சேர்த்து வதக்கவும்.

தக்காளி, மஞ்சள்பொடி, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், தனியாத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக்கவும். பின் நறுக்கிவைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளைச் சேர்த்து சிறிது தண்ணீர்சேர்த்து வேகவைக்கவும். காலிஃப்ளவர் வெந்து, விழுது கெட்டியானபின் இறக்கவும். இதைச் சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம், சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.

வசந்தா வீரராகவன்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com