SATS: தமிழ்ப் புத்தாண்டு விழா
சான் அன்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ்ப்புத்தாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் வில்லுப்பாட்டு, தமிழ் கிராமிய நடனம், காவடியாட்டம், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மாறுவேடப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, தமிழ்ப் பாடல்கள், பரதம் எனப் பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழா அரங்கில் வைக்கப்பட்டிருந்த தமிழ்த்தாய் சிலையும் தேரும் வியக்க வைத்தன. தமிழ் வில்லுப்பாட்டும் கிராமிய நடனமும் மனதைக் கவர்ந்தன. முத்தாய்ப்பாக, மாறுவேடத்தில் தமிழ்ப்பள்ளிக் குழந்தைகள் தமிழ்த்தலைவர்களாக வலம்வந்தனர்.

விழா மேடையில் சென்னை வெள்ள நிவாரண நிதி திரட்டிக் கொடுத்தோருக்கு நினைவுப் பரிசுகளை சங்கத் தலைவர் திரு. விஜய் மற்றும் செயலாளர் திரு. இராஜகுரு வழங்கினர். கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

ராஜ்குமார் மாரியப்பன்,
சான் அன்டோனியோ, டெக்சாஸ்

© TamilOnline.com