நியூ ஜெர்சி: ஸ்ரீ சத்குரு சேவா சமாஜம்
2016 மே 28-29 நாட்களில் ஸ்ரீ சத்குரு சேவா சமாஜம் ஸ்ரீ ராதா கல்யாண மஹோற்சவத்தை ஸ்ரீ குருவாயூரப்பன் கோவில் (மோர்கன்வில், நியூ ஜெர்சி) விமரிசையாகக் கொண்டாட உள்ளது. இந்த சமாஜம் ஒரு லாபநோக்கற்ற அமைப்பாகும். நியூ ஜெர்சி ஸ்ரீ சுவாமிநாத பாகவதர் தலைமையில், ஒவ்வொரு மாதமும் நியூ ஜெர்சி, நியூ யார்க், பென்சில்வேனியா, கனெக்டிகட் மற்றும் பல நகரங்களில் நாமசங்கீர்த்தனத்தை நடத்திவருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு வருடமும் மே மாதம், மெமோரியல் தின விடுமுறை வாரக்கடைசியில் ஸ்ரீ ராதா கல்யாண மஹோற்சவம் நடத்தப்படுகிறது.

நாமசங்கீர்த்தன சம்பிரதாயத்தை வளர்ப்பதோடு, பாகவதர்களுக்கு நிதி உதவி, குழந்தைகள் படிப்பு, ஓதுவார்களுக்கு மாதாந்திரப் பொருளாதார உதவி போன்ற பல நற்காரியங்களை சமாஜம் செய்துவருகிறது.

மேலும் விவரங்களுக்கு
வலைமனை: www.satguruseva.org
மின்னஞ்சல்: info@satguruseva.org

வெங்கடேஷ் விஸ்வநாதன்,
மோர்கன்வில், நியூ ஜெர்சி

© TamilOnline.com