வர்ஜீனியா மாநிலத்தின் உலகமொழிக்கான இருமொழி அங்கீகாரத்தை (Seal of Bi-literacy) தமிழுக்கு ஃபேர்ஃபாக்ஸைத் (Fairfax) பெற்றுள்ளது. அதையடுத்து லௌடன் (Loudoun) மாவட்டத்திலும் அங்கீகாரம் கேட்டு அப்பகுதியின் நூற்றுக்கணக்கான தமிழர்கள், வள்ளுவன் தமிழ் மையம் மற்றும் சங்கமம் தமிழ்ப் பள்ளியின் முயற்சியில் ஒன்றிணைந்து மாவட்டத்தின் கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆஷ்பர்ன் (Ashburn) நகரில் இன்று விண்ணப்பம் செய்தனர்.
ஃபேர்ஃபாக்ஸ் நிர்வாகம் தமது பள்ளித்திட்டங்களில் உலகமொழித் தேர்ச்சிக்கான இரண்டு கிரெடிட்டுகளைத் தமிழ் மாணாக்கர்களுக்கு 2012 ஆண்டிலிருந்து வழங்கி கௌரவித்துள்ளது. இந்த முயற்சியில் ஃபேர்ஃபாக்ஸ் மாவட்டத்தில் இயங்கும் முழுக்கத் தன்னார்வலர்களால் இயங்கும் வள்ளுவன் தமிழ் மையம் பெரும்பங்காற்றியது. லௌடன் பகுதித் தமிழர்களை ஒன்றிணைத்து, SRIS சட்டவல்லுநர் நிறுவனத்தின் உதவியுடனும், அரசு அதிகாரி திருமதி. க்ரிஸ்டன் சி. உம்ஸ்டட் அவர்கள் துணையுடன் முனைவர் எரிக் விலியம்ஸ் மற்றும் கல்வித்துறைக் குழுவினரிடம் விண்ணப்பம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்டிருந்தனர். வேண்டுகோளைக் கல்வித்துறை குழுவினர் தங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக அறிவித்தனர்.
விண்ணப்பம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில் லௌடன் மாணாக்கர்கள் பெருமளவில் பயனடைவர்.
பாஸ்கர் குமரேசன், வள்ளுவன் தமிழ் மையம் |